‘பிரான்ஸ் தனது நாடு தழுவிய ஊரடங்கு தளர்வை பின்வாங்கக்கூடும்’ நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் இன்று முதல் ஊரடங்கைத் தளர்த்த தொடங்கியுள்ள நிலையில் இதிலிருந்து அரசு பின்வாங்கக்கூடும் என நாட்டின் சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் எச்சரித்தார்.

பிரான்ஸில் கொரோனா தொற்றுக்கு 1,76,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,380 பேர் பலியாகியுள்ளனர். 56,217 பேர் குணமடைந்துள்ளனர்.

பிரான்ஸில் சுமார் 8 வாரம் ஊரடங்கு நிலவிய நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்த தொடங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பள்ளிக்கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமானால் பிரான்ஸ் தனது நாடு தழுவிய ஊரடங்கு தளர்வை பின்வாங்கக்கக்கூடும் என சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் எச்சரித்தார்.

வைரஸ் அதன் தீவிரத்தை மீண்டும் தொடங்கினால், நாங்கள் மீண்டும் ஊரடங்கு நடவடிக்கைகளை எடுப்போம் என்று வேரன் தெரிவித்தார்.

உலகின் ஐந்தாவது மிக அதிகமான கொரோனா இறப்பு எண்ணிக்கையுடன் கூடிய பிரான்ஸ், கொரோனா வைரஸின் பரவலைக் குறைக்க மார்ச் 17 முதல் எட்டு வார ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தற்போது அது படிப்படியாக அந்த கட்டுப்பாடுகளை நீக்க தொடங்கியிருக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்