கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் காடுகள் பக்கம் செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் காடுகள் பக்கம் கவனம் செலுத்தும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வன விலங்குகள் அலுவலகமும் பறவைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான LPOவும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

தேசிய வன விலங்குகள் அலுவலகம், கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் யாரும் காடுகள் பக்கம் செல்லாததால், கொஞ்சம் காலமாக விலங்குகள் அமைதியான சூழலிலேயே வாழ்ந்து பழகிவிட்டன என்றும், வழக்கமாகவே இளவேனிற்காலத்தில் அவை அதிக சென்சிட்டிவாக இருக்கும், காரணம் இது அவைகள் குட்டியீனும் காலம் என்றும் தெரிவித்துள்ளது.

அதேபோல, பறவைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனமான LPOவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சத்தம் அதிகம் இல்லாததால் வன விலங்குகள் தங்கள் வழக்கமான வெட்கத்தை கொஞ்சம் விட்டு அதிக சென்சிட்டிவாக இருக்கும் என்கின்றது.

இந்த இரு அமைப்புகளுமே, பல பறவைகள் மற்றும் இரு வாழ்விகளின் சத்தத்தை சமீப காலமாக காடுகளில் கேட்கமுடிகிறது என்றும், பகல் நேரத்திலேயே விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை கவனிக்க முடிகிறது என்றும் கூறியுள்ளன.

ஆகவே, இனி காட்டுப்பக்கம் நடந்து போகிறவர்கள் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் பார்க்கமுடியும், தயவு செய்து அவற்றை பயமுறுத்தாமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் LPO செய்தி தொடர்பாளர் Carine Carbon Brémond.

விலங்குகளை தொந்தரவு செய்யாமல் இருக்குமாறும், நாய்களைக் கொண்டு செல்வோர் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்றும் இரு அமைப்புகளும் காட்டுப்பகுதிகளுக்கு செல்வோரை எச்சரித்துள்ளன.

மனித நடமாட்டம் இல்லாததால் வனம் செழித்துள்ளது என்று கூறும் LPOவின் தலைவரான Allain Bougrain Dubourg, கொரோனா கட்டுபாடுகளின்போது அது அடைந்ததை, மீண்டும் அது இழந்துபோகக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்