பிரான்சில் கொரோனா பரபரப்பால் தவிக்கும் புற்று நோயாளிகள்: திகைக்க வைக்கும் எண்ணிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் பரபரப்பினால் பிரான்சில் 30,000 புற்றுநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வருடத்துக்கு 400,000 புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக புற்று நோயியல் பிரிவு செயற்படவில்லை.

இதனால் இக்காலப்பகுதிக்குள் கண்டறியப்பட்டிருக்கவேண்டிய 30,000 புற்று நோய் பாதிப்புக்கு உள்ளானவர் கண்டறியப்படவுமில்லை, அவர்கள் பரிசோதிக்கப்படவுமில்லை மற்றும் சிகிச்சை அளிக்கப்படவுமில்லை.

இதனால், அவர்களை இனங்காணும் பணி இரட்டிப்பாகுவதுடன், ஆரம்ப கட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சைகளும் வழங்கப்படாமல் விடுபட்டுள்ளன.

இதனிடையே புற்றுநோய் தொடர்பில் தாமதமாகும் சிகிச்சைகள் உயிராபத்தில் போய் முடியும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்