கொரோனா அலை: அவசர காலத்தை நீட்டித்த பிரான்ஸ்!

Report Print Abisha in பிரான்ஸ்

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் அவசரகாலத்தை பிரான்ஸ் அரசு ஜூலை 10 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸில் நேற்றுமுதல், ஊரடங்கு தளர்வுகள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்ததை உணர்ந்த அரசு, நாடுமுழுவதும் ஜூலை 10ஆம் திகதி வரை அவசரகால சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

தற்போது உருவாகியுள்ள இரண்டாவது அலை மேலும், அதிகரிக்க கூடாதென்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 100 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே மக்கள் பயணிக்க முடியும். பொது இடம், பொதுபோக்குவரத்தில் முககவசம் கட்டயாம் அணிய வேண்டும். மேலும், 10 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி இல்லை.

பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 177,547 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 26,646பேர் பலியாகியுள்ளனர் என்று Johns Hopkins தரவுகள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்