கட்டத்திற்குள் தனித்து: பிரான்ஸ் சிறார் பாடசாலையில் இருந்து வெளியான நெஞ்சை உலுக்கும் புகைப்படம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் சிறார் பாடசாலை ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் போடப்பட்டுள்ள கட்டத்திற்குள் குழந்தைகளை தனியாக விளையாட வைக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரான்சில் அமைந்துள்ள டூர்கோயிங் பகுதி பாடசாலை ஒன்றில் இருந்தே நெஞ்சை உலுக்கும் இந்த புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் புதிதாக போடப்பட்டுள்ள கட்டத்தில் சிறார்களை தனியாக விளையாட வைக்கப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் மூன்று மற்றும் நான்கு வயது சிறுவர்கள் கிட்டத்தட்ட இரண்டு மாத கொரோனா வைரஸ் ஊரடங்கைத் தொடர்ந்து வகுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் பெல்ஜியம் எல்லை அருகே அமைந்துள்ள பாடசாலையில் இருந்து குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமது டுவிட்டர் பக்கத்தில் குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள வரலாற்று ஆய்வாளர் Laurence De Cock,

அந்த காட்சிகளில் இருந்து தம்மால் மீள முடியவில்லை எனவும், இதயத்தை நொறுங்கடிக்க செய்கிறது எனவும்,

சிறார்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இதை ஒரு பாடசாலை என்று அழைக்க முடியாது எனவும் கொந்தளித்துள்ளார்.

உண்மையில் குறித்த புகைப்படங்களை ஊடகவியலாளர் ஒருவரே பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

சிறார்கள் ஒன்று கூடி குதூகலமாக இருக்க வேண்டியவர்கள், ஆனால் இந்த கட்டத்திற்குள் எப்படி குதூகலமாக என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், நாம் பார்க்கும் இந்த காட்சிகள் சிறார்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பலரும் அந்த புகைப்படங்களை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பார்த்ததில் மிகவும் சோகமான புகைப்படம் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை எனவும்,

ஆனால் சமூக விலகலை பின்பற்ற வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளனர்.

நீண்ட 8 வார ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் முதல் செயல்பட உள்ளது.

ஆனால், இது குறித்து மிகுந்த கவலையை வெளிப்படுத்தியவர்களில் ஆசிரியர்களும் உள்ளனர்,

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் முடிவில் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்