வரலாறு காணாத மோசமான நிலையில் நாட்டின் முக்கியத்துறை..! பிரான்ஸ் பிரதமர் அபூர்வமான அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தனது சுற்றுலாத் துறையை காப்பாற்றுவதற்காக இதுவரை இல்லாத அளவில் அபூர்வமான திட்டத்தை வெளியிட்டது.

நாட்டின் சுற்றுலாத் துறையை ஆதரிக்க இதுவரை இல்லாத அளிவில் 18 பில்லியன் யூரோ திட்டத்தை பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

திட்டத்தின் கீழ், சுற்றுலா வணிகங்கள் 10,000 யூரோக்கள் வரை மானியங்களுக்கு தகுதி பெறும். மொத்தம் 6.2 பில்லியன் யூரோக்கள் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்களும் உள்ளன.

பிரான்ஸ் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பகுதியாகும் என்றாலும், தற்போது அதன் வரலாற்றில் மிக மோசமான சோதனையை எதிர்கொண்டுள்ளது என பிலிப் வியாழக்கிழமை கூறினார்.

மேலும், பிரான்ஸ் குடியிருப்பாளர்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் உள்நாட்டு கோடை விடுமுறைக்கு செல்ல முடியும் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மோசமாக இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள கஃபேக்கள் மற்றும் உணவகங்கள் நிலைமை மோசமடையாத வரை ஜூன் 2 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பிலிப் கூறினார்.

பாரிஸ் மற்றும் சிவப்பு மண்டலங்களில் உள்ள பிற பகுதிகளில் கஃபேக்கள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறப்பது குறித்து மே 25ம் திகதி தொடங்கும் வாரத்தில் முடிவு எடுக்கப்படும்.

மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான ரத்து செய்தல்களுக்கு முழு பணமும் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் நன்றி தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்