அகதிகளுக்கு உதவிய பிரெஞ்சு விவசாயி வழக்கில் அதிரடி திருப்பம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் பலரை சட்ட விரோதமாக பிரான்சுக்குள் வர உதவிய பிரெஞ்சு விவசாயி வழகில் அதிரடி திருப்பமாக, அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தென் பிரான்சைச் சேர்ந்த ஆலிவ் விவசாயியான Cedric Herrou, 200 புலம்பெயர்ந்தோரை இத்தாலியிலிருந்து எல்லை கடக்க உதவினார்.

அவர்கள் வாழ முகாம் அமைத்துக்கொடுத்ததுடன், 50 எரித்ரியர்களையும் ஒரு பயன்படாத ரயில்வே கட்டிடத்தில் தங்க வைத்து கவனித்துக்கொண்டார்.

ஆகவே, அவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பின்னர் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பவையே பிரான்சின் தாரக மந்திரமாக இருக்கும் நிலையில், Herrouவின் நடவடிக்கைகள் குற்றமல்ல என்று தெரிவித்தது.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்சின் இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம் Herrouவின் மீதான குற்றச்சாட்டுகளை தலைகீழாக திருப்பி, மீண்டும் வழக்கை Lyon நகர மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

அந்த நீதிமன்றம் நேற்று முன் தினம் Herrou மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து விமர்சித்துள்ள மனித உரிமைகள் அமைப்பான Amnesty internationalஐச் சேர்ந்த Rym Khadhraoui, தனது அறிக்கையில், Cedric Herrou எந்த தவறும் செய்யவில்லை, அவர் ஐரோப்பிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மக்கள் மீது இரக்கம் காட்டியுள்ளார், அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்