பிரான்சின் முதல் கொரோனா நோயாளி: சிக்கிய புதிய எக்ஸ் ரே ஆதாரம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் எப்போது எங்கே கொரோனா முதலில் தாக்கியது என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்றை பிரான்ஸ் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளதாக கருதப்படுகிறது.

வடகிழக்கு பிரான்சிலுள்ள Colmar நகரில் ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த கண்டுபிடிப்பை செய்துள்ளது.

நவம்பர் மாதம் 16 மற்றும் 18ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட இரண்டு எக்ஸ் ரேக்கள், கொரோனா அறிகுறிகளையொத்த அறிகுறிகளை காட்டுவதை அவர்கள் கண்டுள்ளார்கள்.

இந்த விடயம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், பிரான்ஸ் தனது முதல் நோயாளி ஜனவரி மாதம் 24ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், உண்மையில் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே ஐரோப்பாவில் பரவியது என்பதற்கு இது ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

Courtesy Albert Schweitzer Hospital

Colmarஇலுள்ள Albert Schweitzer மருத்துவமனையில் Dr. Michel Schmittஇன் தலைமையில் அவரது கதிரியக்கவியல் துறை கடந்த சில வாரங்களாக 2019 இறுதி வாக்கில் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எக்ஸ் ரேக்களை ஆராய்ந்ததில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுரையீரலியல் வல்லுநரான Dr. Vin Gupta என்பவரும், அந்த ஸ்கேன்களை ஆராய்ந்ததில், அவை தான் கண்ட கொரோனா நோயாளிகளின் ஸ்கேன்களை ஒத்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த தகவலை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன.

Courtesy Albert Schweitzer Hospital

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்