இனப்படுகொலை! 25 ஆண்டுகளாக உலகின் மிகவும் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் பிரான்சில் கைது

Report Print Santhan in பிரான்ஸ்
737Shares

ருவாண்டன் இனப்படுகொலையில் சந்தேக நபர்களில் ஒருவராக தேடப்பட்டு வந்த பெலிசியன் கபுகா 25 ஆண்டுகளுக்கு பின்னர் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 1994-ஆம் ஆண்டு, சுமார் 800,000 பேரை படுகொலை செய்த(ருவாண்டன் இனப்படுகொலை) போராளிகளுக்கு நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் Félicien Kabuga பிரான்சில் இன்று கைது செய்யப்பட்டார்.

இவர் தலைநகர் பாரிசிற்கு அருகில் கைது செய்யப்பட்டதாகவும், Asnières-sur-Seine என்ற பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், தவறான பெயரில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 வயது தொழிலதிபரான இவர், கடந்த 1994-ஆம் ஆண்டில் 100 நாட்களில் சுமார் 800,000 பேரை படுகொலை செய்ய நிதியளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

US STATE DEPARTMENT

இதன் காரணமாக அங்கிருந்து தப்பி ஜேர்மனி, பெல்ஜியம், காங்கோ-கின்ஷாசா, கென்யா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் தண்டனையின்றி தங்கியிருந்த இவர், தற்போது பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் Félicien Kabuga மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், ருவாண்டன் இனப்படுகொலை சந்தேகநபர்களான Augustin Bizimana மற்றும் Protais Mpiranya ஆகிய இருவர் இன்னும் சர்வதேச நீதியால் தொடரப்படுகிறார்கள்.

இவரின் மருமகன் ஜேர்மனியில் கடந்த 2007-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்