பிரான்ஸ் தலைநகரில் பாரிசின் வீதிகளில் இப்படியா முககவசங்களை போடுவது? வேதனையில் நகர வாசிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் வீதிகளில் முகக்கவசங்கள் தொடர்ந்து வீசப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரான்சில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் உள்ளது.

இந்நிலையில், தலைநகர் பாரிசில் பொது இடங்களில் பயன்படுத்திய முகக்கவசங்களை வீசுவது வாடிக்கையாகி வருகிறது.

பரிசின் வீதிகளில் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் வீசப்பட்டுள்ளதாக பல்வேறு நகரவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஒவ்வொரு 20 மீற்றருக்கும் ஒரு முகக்கவசத்தை காணக்கூடியதாக உள்ளது என்றும், கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு இச்செயலால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்நலம் கேள்விக்குறியாகுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்