பிரான்ஸில் பள்ளிகள் மீண்டும் மூடல்.. குழந்தைகளுக்கு கொரோனா பரவல் எதிரொலி.. அதிகாரிகள் நடவடிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

வடகிழக்கு பிரான்ஸ் நகரமான ரூபாய்சில் குழந்தை ஒன்றிற்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஏழு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

குழந்தையுடன் தொடர்பு கொண்டவர்களின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில், மூடப்பட்ட பள்ளிகள் தொலைவிலிருந்து செயல்படும் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் கடந்த வாரம் மீண்டும் பள்ளிகள் திறக்கத் தொடங்கின.

ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்து பலர் கவலை கொண்டிருந்தனர், கருத்துக் கணிப்பு ஒன்றில் பங்கேற்றவர்களில் 69% பேர், அதிகாரிகள் மாணவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்று கருதினர்.

கடந்த வாரம் முதல் திறக்கப்பட்ட சுமார் 40,000 பள்ளிகளில் 70 கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன, அதிகாரிகள் பாதுகாப்பில் எவ்வளவு கடுமையானவர்கள் என்பதைக் இந்த நடவடிக்கை காட்டுகிறது.

ஆனால் குழந்தைகளுக்கு கற்பிக்காதது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். எங்கள் குழந்தைகள் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்