கலவர பூமியான பாரீஸ்... இனவெறிக்கெதிரான போராட்டத்தில் பொலிசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இனவெறிக்கெதிரான போராட்டம் ஒன்றில் நிலைமை கைமீறியதால் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச, பாரீஸ் கலவர பூமி போல் ஆனது.

அமெரிக்காவில் பொலிசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கேட்டு பாரீஸில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி அமைதிப் பேரணி நடத்தினர்.

உண்மையில், பொலிஸ் கஸ்டடியில் இறந்த Adama Traore (24) என்னும் கருப்பின பிரெஞ்சு மனிதரின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் 10 பேருக்குமேல் ஓரிடத்தில் கூட அனுமதிக்காது என்பதால், அந்த பேரணிக்கு பொலிசார் அனுமதியளிக்கவில்லை.

பாரீஸ் பொலிசார் முரடர்களும் அல்ல இனவெறியர்களும் அல்ல என பொலிசார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், நேற்றிரவு அனுமதி கிடைக்காத நிலையிலும், எச்சரிக்கையையும் மீறி பாரீஸில் மக்கள் திரளத் தொடங்கினர்.

ஆங்காங்கு குப்பைகளைக் குவித்து தீவைத்தனர் கூடினோர். சிலர் பொலிசார் மீது குப்பைகளையும் பட்டாசுகளையும் தூக்கி எறிந்துள்ளனர். கூடிய மக்களின் எண்ணிக்கை 20,000ஐ தொட்டுள்ளது.

அதிக மக்கள் கூட்டம் திரள போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. பேரணி கலவரமாக மாற பொலிசார் கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

வெளியாகியுள்ள புகைப்படங்களில் மக்கள் குப்பைகளை பொலிசார் மீது வீசியெறிவதையும், ஆங்காங்கு தீ எரிவதையும், பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயல்வதையும் காணலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்