இந்த இரண்டு நாடுகளை நாம் அதிகம் சார்ந்திருக்க கூடாது! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸின் பலவீனம் மற்றும் குறைபாட்டைக் கொரோனா வைரஸ் காட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாதமாக உலக நாடுகளின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் பிரான்ஸ் ஊரடங்கை நீக்கி அதன் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் உணவு விடுதிகளும் அங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரான்ஸின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறுகையில், கொரோனா வைரஸ் பிரான்ஸின் பலவீனம் மற்றும் குறைபாடுகளைக் காட்டியுள்ளது.

நாம் மீண்டும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் இருக்க உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்