நீதிமன்றம் சென்றதால் புகழ்பெற்ற பிரான்ஸ் சேவல் மரணம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரம்பரிய கிராமத்துக்கும் நகரமயமாக்கலுக்கும் இடையிலான மோதலுக்கு அடையாளமாக நீதிமன்றம் சென்ற சேவலான மாரீஸை பலருக்கும் நினைவிருக்கலாம்.

பிரெஞ்சு கிராமப்புறமான Oleron தீவுக்கு சுற்றுலா வந்த ஓய்வு பெற்ற ஒரு தம்பதியர், தங்கள் பக்கத்துவீட்டில் இருக்கும் சேவலான மாரீஸ் அதிகாலமே கூவத்தொடங்கிவிடுவதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, பெரும் தொல்லையாக இருக்கிறது என்று கூறி, அதை அமைதியாக்குவதற்காக அதன் உரிமையாளரான Corinne Fesseauவை நீதிமன்றத்திற்கு இழுத்தனர்.

கிராமப்புறங்களை நாடி வரும் நகர மக்கள், பாரம்பரியமான கிராமங்களின் சத்தங்களையும் வாசனைகளையும் மதிக்கவேண்டும் என்று கூறிய நீதிமன்றம், மாரீஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இந்த வழக்கால் மாரீஸ் பெரும் கவனம் ஈர்த்தது. தற்போது, 6 வயதான மாரீஸ் இறந்துபோனதாக அதன் உரிமையாளரான Corinne Fesseau தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கின்போது coryza என்னும் சுவாசக்கோளாறு ஏற்பட்டு மாரீஸ் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

thelocal

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்