பிரான்சில் அடுத்த மாதம் 11-ஆம் திகதி முதல் இவை எல்லாம் திறக்கப்படும்! முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்கம் மற்றும் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது அது எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில், 159,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29,617 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ஆரம்பத்தில் இருந்ததை விட, நாட்டில் இப்போது கொரோனாவின் இறப்பு வீதம் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக நாட்டில் பல்வேறு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தலைநகர் பரிஸ் உட்பட நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கம் மற்றும் கேளிக்கை விடுதிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரையரங்குகள் மட்டுமிலாமல், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்குகள் மற்றும் கேசினோ சூதாட்ட விடுதிகளும் வரும் ஜூலை 11 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் மாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுக்கு மத்தியில் இவை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு, விளையாட்டு அரங்கம் மற்றும் பந்தைய அரங்குகளுக்கு அதிகபட்சமாக 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்