பிரான்சில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!.. இன்று முதல் எதற்கெல்லாம் அனுமதி?

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி முதல் பிரான்சில் முழுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்தன.

மக்கள் வெளியில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டதுடன், அத்தியாவசிய பயணமாக இருப்பின் அதற்கான தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியதால், கடந்த மாதம் 11ம் திகதியிலிருந்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தாங்கள் வெற்றியடைந்து விட்டதாக 14ம் திகதியன்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அறிவித்தார்.

அவைகளில் முக்கியமானவை,

  • யூன் 15ம் திகதியிலிருந்து பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் Green Zoneஆக அறிவிக்கப்பட்டன.
  • பாரிஸ் உட்பட அனைத்து நகரங்களிலும் Bars மற்றும் Restaurants செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
  • மே 11ம் திகதியிலிருந்தே மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பறைக்கும் 15 மாணவர்களுடன் முககவசம் கட்டாயமாக்கப்பட்டது.
  • High School தவிர அனைத்து பள்ளிகளும் இன்று(22ம் திகதி) முதல் கட்டாயம் திறக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • 10 பேருக்கும் குறைவான நபர்கள் ஒன்றுகூட அனுமதிக்கப்படுகிறது, வயதான நபர்களும் வெளியே வர அனுமதி உண்டு.
  • கடந்த 15ம் திகதியிருந்து முதியோர் இல்லங்களில் தங்கியுள்ள உறவுகளை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி.
  • கடற்கரைகளில் மக்கள் கூடலாம், இன்று (22ம் திகதி)யிலிருந்து சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி.
  • Mayotte and French Guiana இன்னும் Orange Zoneல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்