பிரான்சில் நவம்பர் வரை இந்த விதியை கடைப்பிடிப்பது அவசியம்: இல்லையென்றால்...

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் விதி நவம்பர் வரை நீட்டிக்கப்படலாம்.

பிரான்சில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் விதி நவம்பர் வரை அல்லது கொரோனாவுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நீடிக்கலாம் என்கிறார் பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான Elizabeth Borne.

பிரான்சில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் கட்டாயம் அணியவேண்டும் என்றும், மீறினால் 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் அவசர நிலை ஜூலை மாதம் 10ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில், அதை நீட்டிக்கப்போவதில்லை என அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

ஆனால், வைரஸ் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறக்கக்கூடாது என்று கூறியுள்ள அமைச்சர், இரண்டாவது அலை உருவாகக்கூடாது என்றால், நாம் கவனமாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் அவர்.

ஆகவே, வைரஸ் சுற்றிக்கொண்டிருக்கும் வரை, தடுப்பூசியும் சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படும்வரை, மாஸ்க் அணிவது நல்லது என்று கருதுகிறேன் என்கிறார் Elizabeth Borne.

கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதையடுத்து, பிரான்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டே வருகிறது.

இருந்தாலும், ஓரிடத்தில் அதிகம் பேர் கூடுதல், முத்தமிடுதல், சர்வதேச பயணம் போன்ற விடயங்களில் இன்னமும் விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்துகொண்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்