கிராமங்களில்தான் விவசாயம் செய்ய முடியுமா... பாரீஸில் மொட்டை மாடியில் காய்கனிகளை விளைவிக்கும் ஒரு விவசாயப் புரட்சி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கிராமங்களில் உள்ள நிலங்களில்தான் விவசாயம் செய்ய முடியுமா? நகர்ப்புறங்களிலும் நாங்கள் விவசாயம் செய்வோம் என புறப்படுள்ளது ஒரு குழு.

சரி, ஆனால் விவசாயம் செய்ய நிலத்திற்கு எங்கே போவது? கொரோனாவால் ஏற்பட்ட ஒரு சிறு தாமதத்திற்குப்பின், பாரீஸில் பிரமாண்ட நகர்ப்புற பண்ணைத்திட்டம் ஒன்றின் முதல் கட்டம் துவங்கியுள்ளது.

பாரீஸிலுள்ள கட்டிடம் ஒன்றில் மாடியில் துவக்கப்பட்டுள்ள இந்த திட்டம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய நகர்ப்புற பண்ணையாக வளர உள்ளது. பாரீஸ் கண்காட்சி மையத்தின் மாடியில் 4,000 சதுர மீற்றர் பரப்பில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டம், 2022வாக்கில் 14,000 சதுர மீற்றர்களாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

20 விவசாயிகளின் ஆலோசனையுடன், நாளொன்றிற்கு 1,000 கிலோ காய்கறிகளையும் பழங்களையும் உருவாக்கும் நம்பிக்கையில் களமிறங்கியுள்ளது அந்த குழு.

உள்ளூர் கடைகள், உணவகங்கள் மற்றும் விவசாய கூட்டமைப்புகளுக்கு ஆரோக்கியமான, பூச்சி மருந்துகளற்ற உணவுப்பொருட்களை வழங்குவதுதான் எங்கள் நோக்கம் என்கிறார் அமைப்பின் தலைவரான Pascal Hardy.

வெறும் ஆர்கானிக் பொருட்களை வழங்குவதல்ல, தரமான உள்ளூர் தயாரிப்புகளை வழங்குவதுதான் இன்றைய ட்ரெண்ட் என்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்