அவள் கர்ப்பமாக இருக்கிறாள்: கணவர் கதறியும் பிரான்சில் கருப்பினப் பெண்ணை தாக்கும் பொலிசார்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் ரயில் நிலைய பொலிசார் ஏழு மாத கர்ப்பிணியான கருப்பினப்பெண் ஒருவரை முரட்டுத்தனமாக கீழே தள்ளி கைது செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Diatou (23) என்னும் அந்த கர்ப்பிணிப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளதோடு, அவரைக் காப்பற்ற முயலும் அவரது கணவரையும் கைது செய்துள்ளனர்.

Diatouவை வயிற்றில் கை வைத்து தள்ளும் காட்சியுடன் தொடங்கும் பயங்கர வீடியோ ஒன்று, அவர் கதறக் கதற கீழே தள்ளப்பட்டு, அதுவும் வயிறு தரையில் படும்படி தள்ளப்பட்டு கொடூரமாக கைது செய்யப்படுவதைக் காட்டுகிறது.

ஏற்கனவே கருப்பினத்தவரான ஜார்ஜ் கொலை உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவமும் பாரீஸில் மக்களின் கோபத்துக்கு தூபம் போட்டுள்ளது.

Diatou தங்கள் மீது துப்பினார், கடித்தார் என்றெல்லம் பொலிசார் புகார் கூற, Diatou அதை மறுத்துள்ளார்.

மாஸ்க் அணிய மறுத்ததால் அவர் தாக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார், Diatou மற்றும் அவரது கணவர் மீது புகாரளித்துள்ளதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆகத்து மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்