பிரான்சில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் செல்வாக்கு திடீர் அதிகரிப்பு! வெளியான புள்ளி விவரம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும், அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் பிரான்சும் உள்ளது. இதனால் அந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதால்,

மே 11 அன்று அங்கு கட்டுப்பாடுகள் தளரத் துவங்கின.

இதையடுத்து ஜூன் 14-ஆம் திகதி அன்று ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், வைரஸை எதிர்த்து பிரான்ஸ் தனது முதல் வெற்றியை வென்றதாக அறிவித்தார்.

இந்நிலையில், Odoxa poll என்ற கருத்து கணிப்பு நிறுவனம், இமானுவேல் மேக்ரான் குறித்து நடத்திய கருத்துக் கணிப்பில் அவரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Edouard Philippe-Emmanuel Macron(CREDIT: LOIC VENANCE/AFP)

கடந்த செவ்வாய்க்கிழமை கருத்துக்கணிப்பு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனின் செல்வாக்கு +4 புள்ளிகளாலும், பிரதமர் எத்துவார் பிலிப்பின் செல்வாக்கு +2 புள்ளிகளாலும் அதிகரித்துள்ளது.

மேக்ரோன் தற்போது 39 சதவீத புள்ளிகள் செல்வாக்குடனும், பிரதமர் எத்துவார் பிலிப் தற்போது 48 சதவீத புள்ளிகள் செல்வாக்குடனும் உள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு ஜூன் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,004 பேரிடம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்