பிரான்சில் அதிகரித்து வரும் வெப்பத்தின் நடுவில் மாஸ்க் எப்படி அணிவது?: மருத்துவர்கள் ஆலோசனை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில் மாஸ்க் அணிவது பெரும் பிரச்சினையாகியுள்ளது.

பிரான்சில் வெப்பநிலை 34 டிகிரி செக்‌ஷியசை தொட்டுள்ளது. பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணியாவிட்டாலோ 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

மாஸ்க் அணியும்போது வியர்த்து அசௌகரியம் ஏற்படுவதை பலரும் அனுபவித்துள்ளனர். இந்நிலையில் மாஸ்கும் அணிந்து வெப்பத்தையும் தவிர்ப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர்கள் சில ஆலோசனைகள் தெரிவித்துள்ளார்கள்.

வாய் வழியாக மூச்சு விடாமல் மூக்கு வழியாக சுவாசிப்பது குறைந்த வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் உருவாக்கும்.

ஓட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது மாஸ்க் அணிவதை தவிர்க்கலாம். டவல் அல்லது குளிர்பான போத்தல் ஒன்றை பயன்படுத்தி உங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம்.

நீர்ச்சத்து குறைவாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மாஸ்குகள் ஈரமாகிவிட்டால், அவற்றை குப்பையில் போட்டுவிடுவது நல்லது, துணி மாஸ்குகள் என்றால் துவைத்து காயவைத்து பயன்படுத்தலாம் என்கிறது பிரெஞ்சு சுகாதாரத்துறை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்