பிரான்சில் கொரோனாவால் மூடப்பட்ட ஈபிள் டவர் திறப்பு! எப்படி இருக்கு தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்சில் இருக்கும் ஈபிள் டவர் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை காண உலக முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

ஆனால், தற்போது உலகையே மிரட்டி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், ஈபிள் டவரைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Image Credit: AFP

சுற்றுலா பயணிகளால் கொரோனா வேகமாக பரவும் அச்சம் இருந்ததால் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொண்டது.

இந்நிலையில் பல்வேறு நாடுகளில் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

Image Credit: AFP

பொருளாதார சரிவை சமாளிக்க சுற்றுலா தளங்களில் மீண்டும் பார்வையாளர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈபிள் டவர் 3 மாதங்களுக்கு இன்று மீண்டும் திறக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

Image Credit: AP

இதையடுத்து இன்று அங்கு குவிந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகளுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதாவது நிச்சயமாக இங்கு வருபவர்கள், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், அதுமட்டுமின்றி அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது.

உள்ளே நுழைந்த பார்வையாளர்களுக்கு கையை சுத்தம் செய்யும் சானிடைசர் கொடுக்கப்பட்டது. அதன் பின் உள்ளே சென்ற பார்வையாளர்கள் ஈபிள் டவரை கண்டு களித்தனர்.

324 மீற்றர் உயரமுள்ள இந்த டவரை காண ஜூலை மாதம் வரை மக்கள் படிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லிப்ட் தற்போது இயக்கப்படவில்லை.

Image Credit: REUTERS/Charles Platiau

டவரின் 2வது தளம் வரை செல்ல மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image Credit: AFP

Image Credit: Reuters

Image Credit: AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்