பிரான்சை நோக்கி படையெடுக்கும் பிரித்தானியர்கள்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெக்சிட்டின் முழுமையான தாக்கம் ஏற்படும் முன் பிரான்சில் சொத்து வாங்குவதற்காக அவசரப்படுகிறார்களாம் பிரித்தானியர்கள்!

பிரெக்சிட் transition period டிசம்பர் 31ஆம் திகதி முடிவதற்குள் எப்படியாவது பிரான்சில் சொத்து வாங்க பிரித்தானியர்கள் அவசரப்படுவதாகவும், தனது தொலைபேசி விடாமல் ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கிறார் பிரான்ஸ் ரியல் எஸ்டேட் ஏஜண்ட் ஒருவர்.

தற்போதைக்கு வரைக்கும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக இருக்கும் நிலையில், ஜனவரி 1, 2021இலிருந்து அதுவும் ஒரு மூன்றாவது நாடாகிவிடும் என்பதால், அதற்குள் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் என்ற சலுகையை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிவிட பிரித்தானியர்கள் அவசரம் காட்டுவதாக தெரிவிக்கிறார் அவர்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் தற்போது நெகிழ்த்தப்பட்டு வரும் நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரை ரியல் எஸ்டேட் தொழில் பயங்கர பிஸியாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறார் அவர்.

முன்பெல்லாம் மக்கள் விடுமுறை இல்லங்களை பிரான்சில் வாங்கத்தான் விரும்புவார்களேயொழிய, செட்டில் ஆக விரும்பமாட்டார்கள் என்று கூறும் அவர், மாறாக தற்போது வீடுகளை வாங்கி பிரான்சில் செட்டில் ஆக பிரித்தானியர்கள் விரும்புவதாக தெரிவிக்கிறார்.

இதற்கு பிரெக்சிட் ஒரு காரணமாக இருக்கலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில் முதியவர்கள் மற்றும் உடல் நல பிரச்சினைகள் கொண்ட பிரித்தானியர்கள், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு திரும்பிச் செல்லவிரும்புவதாகவும், transition period முடியும்போது தங்கள் வருவாய் என்ன ஆகும் என்ற கவலை அதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் தான் கருதுவதாக தெரிவிக்கிறார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்