பிரான்சில் இங்கு எல்லாம் செல்லும் போது மாஸ்க் கட்டாயம்... மீறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விதிமுறைகள், மீறினால் 100 யூரோக்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. அதன் பின் தற்போது நாட்டில் சில தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் ஒரு சில விதிகள் அப்படியே உள்ளது. அந்த விதிகளில் ஒன்று தான் முகக்கவசம் அணிவது, அதன் படி முகக்கவசம் எங்கெல்லாம் அணிய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

Photo: AFP

முகக்கவசம் பொது போக்குவரத்துகளான டாக்ஸிகள் மற்றும் விடிசி வாகனங்கள் உட்பட - பிரான்சில் உள்ள அனைத்து வகையான பொது போக்குவரத்திற்கும் முகமூடி அணிவது கட்டாயமாகும்.

நீங்கள் முகக்கவசம் இல்லாமல் பிடிபட்டால் 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும். தலைநகர் பாரிசில் இருக்கும் மெட்ரோவில் பொலிசார் அடிக்கடி காணப்படுகின்றனர்.

இதனால் முகக்கவசம் அணியாமல் சென்றால் நிச்சயம் அபராதம் கட்ட நேரிடும். அதே போன்று இரயில்களிலும்

நடத்துனர்கள் உங்கள் முகமூடியை சரியாக அணிந்திருக்கிறீர்களா என்று சோதிப்பார்கள். அதே போன்று விமான நிலையம், பேருந்து மற்றும் விமானத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.

Photo: AFP

கடைகள்

கடைகளுக்கு செல்லும் போது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் அதன் உரிமையாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

இதனால் நீங்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால், உங்களை தடை செய்ய உரிமையாளுக்கு உரிமை இருக்கிறது. எனவே அந்த கடையின் உரிமையாளர் முகக்கவசம் அணிய சொன்னால் நீங்கள் அணிந்து தான் ஆக வேண்டும்.

அலுவலகங்கள்

தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தக் கொள்கைகளைத் தீர்மானித்து கொள்ளலாம். ஆனால் அதுவே அரசு அலுவலகங்களில் நீங்கள் பொது இடங்களில் முகமூடி அணிய வேண்டும்.

பார்கள்/உணவகங்கள் / கபேக்கள்

இங்கு நீங்கள் செல்லும் போது நிச்சயமாக முகக்கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும்.

தியேட்டர்கள்

இடு சுகாதார விதிகளுடன் மீண்டும் திறக்கப்படுகின்றன. இங்கு போயர் மற்றும் டிக்கெட் ஹால் போன்ற வகுப்புவாத பகுதிகளில் முகமூடியை அணிய வேண்டும், ஆனால் நீங்கள் அமர்ந்தவுடன் அதை அகற்றலாம் என்று கூறப்படுகிறது.

சுற்றுலா தளங்கள்

சுற்றுலா தள்ங்கள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுகின்றன, அவற்றில் பெரும்பாலான இடங்களில் முகக்கவசங்கள் தேவைப்படுகின்றன. எனவே நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால், தளத்தின் வலைத்தளத்தை முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது.

பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள்

பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் முகக்கவசம் அணிவது குறித்து உள்ளூர் அதிகாரிகளே முடிவு எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இது இடத்திற்கு இடம் மாறுபடும் என்பதால், அந்தந்த பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற அனைத்தின் நுழைவாயிலிலும் விதிகள் எழுதப்பட்டிருக்கும்.

தெரு வீதிகள்

தெருவில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. இருப்பினும், நீங்கள் நெரிசலான இடத்தில் இருக்கக்கூடும் என்றால் முகமூடி அணிவது நல்லது என்று அரசு அறிவுறுத்துகிறது.

விழாக்கள்-நிகழ்ச்சிகள்

தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகள் தடையில் தான் உள்ளது. எந்த நிகழ்ச்சிகளிலும் சமூக இடை வெளி என்பது கடினமானதாக இருக்கும், இருப்பினும் அங்கு முகக்கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது, நீங்கள் தற்போது வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் ஒரு முகக்கவசத்தை அணிந்துகொள்வதோ அல்லது உங்கள் சட்டைப் பையிலோ அல்லது உங்கள் கைப்பையில் வைத்திருப்பது நல்லது.

மேலும், பிரான்சில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயம் என்னும் விதி நவம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என்று செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்