மிகப்பெரிய தங்கக் கடத்தல் கும்பலை மடக்கிய பிரெஞ்சு பொலிசார்: எவ்வளவு தங்கம் கைப்பற்றப்பட்டது தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சிலும் ஜேர்மனியிலுமாக தங்கம் கடத்தும் மிகப்பெரிய கும்பல் ஒன்றை பிரெஞ்சு பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடத்தல் கும்பலிடமிருந்து 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருடர்களிடமிருந்து தங்கத்தை வாங்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், அதை தங்கப் பாளங்களாக செய்து ஜேர்மனியிலுள்ள தங்க வியாபாரிகளிடம் விற்றுவிடுகின்றனர்.

இந்த சட்டவிரோத தங்கக் கடத்தலில் பல மில்லியன் யூரோ மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 1.5 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான 30 கிலோ தங்கம் தவிர, 340,000 யூரோக்கள் மதிப்பிலான 12 வாகனங்கள், 30 ஆடம்பர கைக்கடிகாரங்கள்மற்றும் 121,000 யூரோக்கள் கரன்சியும் அந்த கடத்தல் கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்