40 நொடிகள்... பெரும் விபத்தில் இருந்து தப்பிய 166 விமான பயணிகள்: சில்லிட வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சின் பெர்கெராக் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் ஒன்று மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரான்சின் பெர்கெராக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய Ryanair விமானம் ஒன்று தானியங்கி பாதுகாப்பு அமைப்பு எழுப்பிய எச்சரிக்கையால் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ளது.

சம்பவத்தின்போது மேகமூட்டமாக காணப்பட்டதால், விமானி அந்த விமானத்தை தாழ்வாக செலுத்தியுள்ளார்.

ஆனால் தரைக்கும் விமானத்திற்கும் இடையே வெறும் 842 அடி மட்டுமே இருந்துள்ளது என்ற தகவல் பின்னர் தெரியவந்தது.

சுமார் 2 நிமிடங்கள் விமானம் தாழ்வாக பறந்த நிலையில், திடீரென்று விமானத்தின் தானியங்கி பாதுகாப்பு அமைப்பானது விமானத்தை மேலுழுப்ப எச்சரித்துள்ளது.

இதனால் சுதாரித்துக் கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை மேலெழுப்பியுள்ளனர். இந்த எச்சரிக்கையை தவற விட்டிருந்தால் அடுத்த 40 நொடிகளில் விமானம் பெரும் விபத்தில் சிக்கியிருக்கும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் இரண்டாவது விமானியின் கட்டுப்பாட்டில் விமானம் இருந்த போது நேர்ந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, விமானம் தரையிறங்குவதற்கான ஆயத்த கட்டத்திலும் இருந்துள்ளது. தானியங்கி பாதுகாப்பு எச்சரிக்கை ஒலித்ததும், சுதாரித்துக் கொண்ட 27 வயதான அந்த இளம் விமானி உயரத்தை 4,000 அடியாக உயர்த்தியுள்ளார்.

சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அந்த விமானம் 166 பயணிகளுடனும் 6 விமான ஊழியர்களுடனும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்