பிரான்சில் வாகனத்தின் உள்ளே இருந்த சவப்பெட்டிகளை உடைத்த போது அதிகாரிகள் கண்ட காட்சி: என்ன இருந்தது தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் காரில் இருந்த நான்கு சவப்பெட்டிகளை சுங்கவரித்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, அதன் உள்ளே கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

பிரான்சின் Doubs நகரில் செல்லும் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வைத்தே அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், ஸ்பெயினில் இருந்து ருமேனியா நோக்கி வாகனம் ஒன்று நான்கு சவப்பெட்டிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது வாகனம் Doubs நகரின் A36 நெடுஞ்சாலையில் Miserey-Salines நகர் அருகே வந்த போது, அங்கிருந்த பிரான்ஸ் சுங்கவரித்துறையினர், குறித்த வாகனத்தை மறைத்து விசாரித்துள்ளனர்.

அதன் பின் காரின் உள்ளே இருக்கும் சவப்பெட்டி குறித்து கேட்ட போது, உள்ளே எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரின் சவப்பெட்டிகளை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது, உள்ளே சுமார் 60 கிலோ எடை கொண்ட கஞ்சாப் பொட்டலங்களை கண்டுபிடித்துள்ளனர்.இதையடுத்து ருமேனிய நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் மீது ஸ்பெயினில் வழிப்பறி கொள்ளை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குறித்த கஞ்சா பொட்டலங்கள் ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்