பிரான்சில் பயங்கரம்... மனைவியை சரமாரியாக குத்தி கொன்ற கணவன்! பொலிசிடம் சொன்ன 18 வயது மகள்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரான்சில் Rueil-Malmaison (Hauts-de-Seine) நகரில் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 54 வயது மதிக்கத்த நபர் தன்னுடைய மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக, அப்பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று சனிக்கிழமை காலை காவல்துறையினருக்கு தொடர்பு கொண்ட அப்பெண்ணின் 18 வயதுடைய மகள், தமது தாயாரை தந்தை கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வீட்டின் உள்ளே கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர் கையில் ஆயுதத்துடன் இருந்துள்ளார்.

காவல்துறையினர் அவரை கைது செய்தனர். Hauts-de-Seine நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மனைவியின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்த 34 ஆவது பெண் இவர் ஆவார். 2019 ஆம் ஆண்டில் மொத்தமாக 126 பெண்கள் குடும்ப வன்முறை காரணமாக கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்