இல்லாத வேலைக்கு மில்லியன் யூரோ ஊதியம்... பிரான்ஸ் முன்னாள் பிரதமரும் மனைவியும் சிக்கலில்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரெஞ்சு முன்னாள் பிரதமர் François Fillon மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு போலியான வேலை வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உதவியாளராக ஒருபோதும் செய்யாத பணிக்காக பெனிலோப் ஃபில்லனுக்கு 1.156 மில்லியன் யூரோ ஊதியமாக வழங்கிய புகாரில் கன்சர்வேடிவ் கட்சி அரசியல்வாதியான François Fillon குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னாள் பிரதமர் François Fillon -கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மனைவிக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களம் காண முற்பட்ட நிலையிலேயே இந்த ஊழல் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்ததுடன், பிரான்சுவா பில்லனின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் கண்டது.

இருவரும் உடனடியாக மேல்முறையீடு மேற்கொண்டதுடன், ஃபில்லனின் உடனடி கைதினை தடுக்கவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று பாரிஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெனிலோப் ஃபில்லனுக்கு வழங்கப்பட்ட ஊதியமானது அவர் செய்யத பணிக்கு என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எந்த பயனும் இல்லாத ஒரு வேலைக்காக அரசாங்கத்தால் அவர் பணியமர்த்தப்பட்டதாகவும் நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இதனால் பொது நிதியை மோசடி செய்வதற்கும் மறைப்பதற்கும் உடந்தையாக இருந்ததாக பெனிலோப் ஃபில்லன் குற்றம் சாட்டப்பட்டார்.

இருவருக்கும் சிறை தண்டனையுடன், சுமார் 375,000 யூரோ பிழையாகவும் விதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 1998 முதல் 2013 வரை பெனிலோப் ஃபில்லன் அரசாங்கத்திடம் இருந்து ஊதியமாக பெற்ற மொத்த தொகையையும் திருப்பிச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அடுத்த 10 ஆண்டு காலம் François Fillon எந்த அரசு பதவிக்கும் வர தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்