பிரான்சின் புதிய பிரதமரை தெரிவு செய்து அறிவித்த ஜனாதிபதி மேக்ரான்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் பிரதமராக செயல்பட்டுவந்த எட்வார்ட் பிலிப் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக மேயர் ஜீன் காஸ்டெக்ஸ் ஜனாதிபதி மேக்ரானால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் புதிய அமைச்சரவைக்கு ஜீன் காஸ்டெக்ஸ் பிரதமராக தலைமை தாங்க உள்ளார்.

வெள்ளிக்கிழமை வெளியான மேக்ரானின் நேர்காணல் ஒன்றில், புதிய பாதையில் பிரான்ஸ் நாட்டை இனி வழி நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பிரதமர் பிலிப் அதிகாலையில் ஜனாதிபதியை சந்தித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பிலிப் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிரான்ஸ் அமைச்சரவையில் ஒரு மறுசீரமைப்பு சில காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்துள்ளது. மட்டுமின்றி, ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி தமது ஐந்தாண்டு கால பதவியில் ஒரு பிரதமரை மாற்றுவது வழக்கமான நடைமுறையே.

தற்போது பிரதமராக தெரிவாகியிருக்கும் 55 வயதான ஜீன் காஸ்டெக்ஸ் பிரான்ஸ் மக்களுக்கு அதிகம் அறிமுகமில்லாத நபர். ஆனால் அவர் ஒரு மூத்த அரசு ஊழியர் மற்றும் கொரோனா தொற்றுநோய்க்கு அரசாங்கத்தின் சார்பில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்