பிரான்ஸ் தலைநகரில் மிகப் பெரிய தீ விபத்து...மயிரிழையில் உயிர் தப்பிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகரில் ஏற்பட்ட மிகப் பெரிய தீவிபத்தில் இருந்து அந்நாட்டு அழகி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் 17-ஆம் வட்டாரத்தில், avenue des Ternes வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயமடைந்துள்ளனர்,

இந்த விபத்தில், 18 பேர் வரை எவ்வித காயங்களும் இன்றி தீயணைப்பு படையினரால் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் ஆழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Clémence Botino-ம் ஒருவர். அவர் தீயணைப்பு படையினரால் துரிதமாக காப்பாற்றப்பட்டார்.

அவர் பாதுகாப்பாக உள்ளார் என்று பிரான்ஸ் ழகிப்போட்டி அமைப்பின் தலைவர் Sylvie Tellier தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்