பிரான்ஸ் மாகாணமொன்றில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அங்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் Mayenne பகுதியில் புதிதாக கொரோனா தொற்று பரவத்தொடங்கியுள்ளதையடுத்து, அது அதிக அபாயமுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு 10 பேர் வரை கொரோனா பரவுவது ஏற்றுக்கொள்ளப்படத்தக்க அளவு என கருதப்படும் நிலையில், இப்பகுதியில் ஒரு லட்சம் பேருக்கு 50.1 பேருக்கு கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஜூலை 7 முதல் 14 வரையிலான வாரத்தில், கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 8இலிருந்து 16ஆக உயர்ந்துள்ளது.
இத்தகைய உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள முதல் பகுதி (கடல் கடந்த பகுதிகளை சேர்க்காமல்) பிரான்சிலேயே Mayenneதான்.
இதனால் அதிகாரிகள் எந்த கட்டிடங்களுக்குள் இருந்தாலும் மக்கள் மாஸ்க் அணியவேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக, இரண்டாவது கொரோனா அலை உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதையும் மறுக்க முடியாது.