பிரான்சில் புதிதாக தேர்வாகியுள்ள பிரதமர் எப்படி இருக்கிறார்? மக்களின் கருத்து இது தான்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஜீன் கேஸ்டேக்ஸ்ன் சேவைகள் திருப்திகரமாக இருப்பதாக பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான் பிரதமர் எத்துவார் பிலிப் பதவி விலகியதை அடுத்து, நாட்டின் புதிய பிரதமராக Jean Castex அறிவிக்கப்பட்டார்.

அவர் பதவி ஏற்றதன் பின்னர், அவரின் சேவைகள் தொடர்பாக பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனமான Ifop முதலாவது கருத்துக்கணிப்பை மேற்கொண்டது.

இதன்படி, புதிய பிரதமர் Jean Castex இன் சேவைகள் திருப்திகரமாக உள்ளதாக 55 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதே அளவுடைய எண்ணிக்கையை தான், கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதத்தில் எத்துவார் பிலிப் பதவியேற்ற சில நாட்களில் பெற்றிருந்தார்

அதுமட்டுமின்றி, ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் 37 சதவீத மக்கள் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகள் காரணமாக மேக்ரானின் செல்வாக்கு தொடர்ந்தும் குறைவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்