நெருப்பு கோளமான வாகனம்: பிரான்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறார்கள் உடல் கருகி பலி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சின் வேலன்ஸ் நகருக்கு வடக்கே கார் விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சிறார்கள் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி மூன்று பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரும் பலத்த காயமடைந்துள்ளனர்.

ஆல்பன் பகுதியில் திங்களன்று இரவு 7 மணிக்கு சற்று முன்னர் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.

இதில் ஐந்து குழந்தைகள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய நான்கு பேரும் எரியும் வாகனத்திலிருந்து தப்பிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

ஒரு குழந்தை உட்பட உயிர் தப்பிய நால்வரும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் முழுமையான அவசர நிலையில் உள்ளனர் எனவும் தகவல் வெளியானது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு பிரான்ஸ் உள்விவகார அமைச்சரும் போக்குவரத்து அமைச்சரும் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று ஹெலிகொப்டர்கள் உதவியுடன் படுகாயமடைந்த நால்வரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்தின் சூழ்நிலைகள் குறித்த விசாரணைகள் உடனையே முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதல் சாட்சியங்களின் கூற்றுப்படி, வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையை விட்டு வெளியே சென்றதாகவும், பின்னர் தீக்கிரையாகியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்