பூட்டிய வீட்டுக்குள் சிக்கிய சிறுவர்கள்... பற்றியெரிந்த வீடு: அடுத்து நடந்த அசாதாரண சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பிள்ளைகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில், திடீரென வீடு தீப்பிடித்துள்ளது.

பிரான்சின் Grenoble நகரில், வீடு ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், பெற்றோர் வீட்டு சாவியையும் தங்களுடன் கொண்டு சென்றிருந்தார்கள்.

எங்களிடம் சாவி இல்லை, எங்களிடம் சாவி இல்லை என அவர்கள் சத்தமிட்டு அழ, அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் அங்கு ஓடி வந்திருக்கிறார்கள்.

அப்போது அந்த சிறுவர்களில் மூத்தவனான 10 வயது சிறுவன் தனது 3 வயது தங்கையை தூக்கி 40 அடி உயரத்திலிருந்து கீழே நின்றவர்களிடம் போட, அவர்கள் அந்த சிறுமியை பிடித்து பத்திரமாக இறக்கிவிட்டார்கள்.

ஆனால், பயங்கரமாக கரும்புகை வரும் அந்த வீட்டின் ஜன்னலருகேயே அந்த மூத்த சிறுவன் பயந்தபடி திகைத்து நிற்க கீழே நிற்பவர்கள், அவனையும் குதிக்கும்படி சத்தமிடுகிறார்கள்.

அவனும் குதிப்பதையும், கீழே நின்றவர்கள் அவனையும் பத்திரமாக பிடித்து கீழே இறக்குவதையும் வெளியான வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

பிள்ளைகள் பத்திரமாக எந்த காயமும் இன்றி மீட்கப்பட்ட நிலையில், அவர்களை தாங்கிப் பிடித்த Athoumani Walid என்பவருக்கும், மற்றொருவருக்கும் கை எலும்பு உடைந்துவிட்டது.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தீ எப்படி பற்றியது, பெற்றோர் ஏன் அந்த சிறுவர்களை தனியாக விட்டுவிட்டு சென்றார்கள் என்பது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்