பிரான்சில் வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கு இது இலவசமாக வழங்கப்படும்! அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் வறுமையின் கீழ் வாழும் சுமார் 7 மில்லியன் மக்களுக்கு துவைக்க கூடிய முகக்கவசங்களை அரசு விநியோகிப்பதாக அறிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி விடக் கூடாது என்பதற்காக, பிரான்சில் முக்கிய விதிகள் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வாரம் முதல் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி குறிப்பிட்ட இடங்களில் முகக்கவசம் அணிய தவறினால், அபராதம் 135 யூரோ வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Photo: AFP

கொரோனா காரணமாக ஏற்கனவே மக்கள் கடும் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில் இந்த விதி அமுல் ஆனால், வறுமையின் கீழ் வாழும் மக்களின் நிலை என்ன? அவர்களுக்கு இலவசமாக அரசு முகக்கவசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, நாட்டின் 7 மில்லியன் வறுமையின் கீழ் வாழும் ஏழ்மையான மக்களுக்கு இலவசமாக துவைக்கக்கூடிய முககவசங்களை அரசு விநியோகிக்கத் தொடங்குவதாக சுகாதார அமைச்சர் Olivier Véran நேற்று அறிவித்துள்ளார்.

குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்கு உரிமையுள்ள முழுமையான சுகாதார காப்பீடான complémentaire santé solidaire பெறும் ஏழு மில்லியன் மக்களுக்கு முகக்கவசம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Health minister Olivier Véran/ Photo: AFP

இது குறித்து சுகாதார அமைச்சர் Olivier Véran கூறுகையில், நாங்கள் பொது மக்களுக்காக 40 மில்லியன் துவைக்கக்கூடிய முகக்கவசங்களை அனுப்பப் போகிறோம், இது 30 முறை பயன்படுத்தப்படலாம். வறுமைக் கோட்டில் இருக்கும் ஏழு மில்லியன் பிரான்ஸ் மக்களுக்கு வழங்குவதற்காக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது, complémentaire santé solidaire பயனாளிகள் பெறலாம் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்