பிரான்ஸ் விமானங்களில் பயணம் செய்வோருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் விமானங்களில் பயணம் செய்வோர், 11 வயதுக்கு குறைவாக இருந்தால் மாஸ்க் அணியத்தேவையில்லை, மற்றவர்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்பது தெரிந்ததே.

ஆனால், அப்படி மாஸ்க் அணியவேண்டியவர்கள் துணியாலான மாஸ்க் அணிந்துவந்தால், அவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர் கோர்சிக்கா ஆகிய நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

ஏர் பிரான்ஸ் நிறுவனம், தங்கள் விமானங்களில் பயணம் செய்வோர் FFP1 சர்ஜிக்கல் மாஸ்குகள் அல்லது FFP 2 அல்லது FFP 3 வகை மாஸ்குகளை அணிந்துகொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், ஏர் பிரான்ஸ் நிறுவனமும் தங்கள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் சர்ஜிக்கல் மாஸ்குகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்