பிரான்சில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு! கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் எத்தனை பேர் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000-க்கும் மேல் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் முன்பு இருந்ததை விட, பிரான்சில் குறைந்து வந்ததால், அந்நாட்டு மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டு வருகின்றனர்.

இருப்பினும் நாட்டில் இரண்டாவது கொரோனா அலை பரவிவிடக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு விதிகளை அமுல் படுத்தி வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் நாட்டில் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழை இரவிற்கு, முந்தைய 24 மணி நேரத்தில், 1062 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது முந்தைய வாரங்களை விட அதிகம். ஏனெனில் கடந்த சில நாட்களில் நாள் ஒன்றிற்கு சுமார் 500 பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதனால் இது ஒரு வித கவலையை ஏற்படுத்தினாலும், இறப்புவிகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் மட்டும், இந்த கொரோனாவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சீராக உள்ளது.

மிகவும் மோசமான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 9-ஆம் திகதி முதல் படிப்படியாக குறைந்து வருகிறது, அப்போது நாடு முழுவதும் உள்ள ஐ.சி.யூ பிரிவுகளில் 7,148 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்