பிரான்சில் மாயமான ஜப்பானிய இளம்பெண்: வழக்குக்காக சிலியிலிருந்து நாடு கடத்தப்படும் இளைஞர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் பயின்றுவந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவர் திடீரென மாயமானார்.

Narumi Kurosaki (21) என்ற அந்த ஜப்பானிய இளம்பெண் Nicolas Zepeda (29) என்ற சிலி நாட்டவரான தனது முன்னாள் காதலனுடன் உணவகம் ஒன்றிற்கு சென்று திரும்பிய இரவு மாயமானார்.

அவரது அறையிலிருந்து கூச்சலிடும் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்போர் கூறியிருந்தார்கள்.

Narumi மாயமாக, பொலிசார் விசாரணையை துவக்குவதற்குள் Nicolas சிலிக்கு தப்பியோடியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக Nicolas மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர் சிலியில் தனது தாயின் வீட்டில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

Narumiயின் உடல் கிடைக்காத நிலையில், Nicolasஐ பிரான்சுக்கு நாடு கடத்த கோரியதற்கு சிலி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தாலும், கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதால் Nicolasஐ பிரான்சுக்கு கொண்டு வரமுடியாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று Nicolas பாரீஸ் கொண்டுவரப்படுகிறார். சிலியில் வழக்கு விசாரிக்கப்பட்டபோது, Narumi மாயமான இரவு தான் அவரை சந்தித்தாக கூறிய Nicolas, தங்களுக்குள் காதல் முறிந்துவிட்டிருந்தாலும், இருவரும் சம்மதத்தின்பேரில் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்