பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை: திகிலில் மக்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதை அடுத்து இரண்டாவது அலை உருவாகிவிட்டதோ என மக்கள் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் 1,130 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதோடு, R எண்ணும் 1.3ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிச்சயம் பிரான்சில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையே இந்த எண்ணிக்கை தெளிவாக காட்டுவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, நாம் மீண்டும் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதற்கு முந்தையகாலகட்டத்திற்கு திரும்பிவிட்டோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  

அத்துடன் எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ள சுகாதாரத்துறை, ஊரடங்கின்போது வைரஸை கட்டுப்படுத்த செய்யப்பட்ட நல்ல வேலையை தொலைத்துவிட்டோம் என்று கூறியுள்ளதோடு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படிந்து நடக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காணப்படும் பிரான்சில் இதுவரை 180,000 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதோடு, 30,000க்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Image: PA

Image: PA

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்