இந்த ஊருக்கு மட்டும் போயிடாதீங்க..! நாட்டு மக்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்திய பிரான்ஸ்

Report Print Basu in பிரான்ஸ்

சமீபத்திய வாரங்களில் கொரோனா வழக்குகள் அதிகரித்த பின்னர் பிரான்ஸ் குடிமக்கள் ஸ்பெயினின் கட்டலோனியாவிற்கு பயணிக்க வேண்டாம் என்று பிரான்சின் பிரதமர் கடுமையாக பரிந்துரைத்தார்.

பாரிஸுக்கு வடக்கே சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், ஸ்பெயினிலிருந்து பிரான்சிற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையையும் குறைக்க பிரான்ஸ் அரசாங்கம் ஸ்பானிஷ் மற்றும் கட்டலோனியா அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறது என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை இப்போது திறந்தே இருக்கும் என்றார்.

வியாழக்கிழமை வரையிலான 14 நாட்களில் கிட்டத்தட்ட 8,000 வழக்குகள் கட்டலோனியாவில் கண்டறியப்பட்டன. இதே காலப் பகுதியில் ஸ்பெயின் முழுவதும் 16,410 வழக்குகள் பதிவாகியுள்ளது.

நோய்த்தொற்று விகிதம் அதிகமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே 16 நாடுகளில் இருந்து பிரான்ஸ் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வருபவர்களை பிரான்ஸ் கட்டாயமாக சோதனை செய்யத் தொடங்கும் என்றும் காஸ்டெக்ஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

சோதனைியல் கொரோனா உறுதியாகும் நபர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இதில், அமெரிக்கா, பிரேசில், அல்ஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், பனாமா, பெரு, செர்பியா, துருக்கி மற்றும் மடகாஸ்கர் ஆகிய 16 நாடுகளில் அடங்கும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்