பிரான்சில் அமலுக்கு வரும் புதிய சட்டம்! சிக்குபவர்களுக்கு இதான் கதி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு, குறிப்பாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கு செப்டம்பர் முதல் நாடு முழுவதும் நேரடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான வன்முறைகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் பல வாரங்களாக அமைதியின்மை நிலவி வரும் நைஸ் நகரம் பயணத்தில் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இந்ந நடவடிக்கையை அறிவித்தார்.

ரென்ஸ் மற்றும் மார்செல்லஸ் போன்ற நகரங்களில் சோதனைகளுக்கு பின்னர் இந்த நேரடி அபராதம் நடவடிக்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணைக்கப்பட்ட 200 யூரோ அபராதம் 15 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் 150 யூரோவாக குறையும். ஐரோப்பாவில் கஞ்சா நுகர்வோர் அதிகம் உள்ள நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும்.

பொழுதுபோக்கு கஞ்சா பயன்பாடு குறித்த சட்டம் நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.

கனடா போன்ற பல நாடுகள் இதை சட்டப்பூர்வமாக்கியுள்ளன, மற்ற நாடுகளில் சிறிய தண்டனை சட்டங்கள் உள்ளன. ஆனால் இன்னும் பல நாடுகள் கடுமையான சிறைத்தண்டனை விதிக்கிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்