பிரான்சில் மற்றொரு தடை அறிமுகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து உணவகங்கள் மற்றும் கபேக்களின் மாடிகளில் ஹீற்றர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தேவையின்றி ஆற்றல் வீணாக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சரான Barbara Pompili தெரிவித்துள்ளார்.

என்றாலும், உணவகத்துறை கொரோனாவின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த தடை குளிர்காலம் முடிவடையும்போதுதான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்