ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலையா? பிரான்சின் நிலை என்ன? சுகாதார அமைச்சர் விளக்கம்

Report Print Santhan in பிரான்ஸ்
613Shares

பிரான்சில் கொரோனாவிற்கான இரண்டாவது அலை இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் பிரான்சில் அதிகரித்து காணப்பட்டாலும், இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாடு ஆளாகவில்லை என்று சுகாதார அமைச்சர் Olivier Véran கடந்த புதன் கிழமை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் நோய் புதியதொடு எழுச்சியை பெற்றுவிடக் கூடாது என்பதால், பொறுப்புடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

நாட்டில் ஒரு சில நாடுகளில் கொரோனா எண்ணிக்கை அதிகாரிப்பது போல் தெரிந்தாலும், அது சோதனையின் அளவு அதிகரித்ததன் காரணமாக அப்படி தெரிகின்றன.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் சமீபத்தில் ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என்று எச்சரித்தார்.

இதன் காரணமாக ஸ்பெயினில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தற்போது பிரான்ஸ் சுகாதார அமைச்சர், நாங்கள் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளில் இல்லை, நாங்கள் ஒரு தொற்றுநோயை அடுத்து இருக்கிறோம்.

சில மருத்துவமனைகளில் நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. நாங்கள் இன்னும் நிறைய சோதனை செய்கிறோம் எங்கள் அதிகாரிகளின் உறுதியான நடவடிக்கை மூலம் தான் இந்த இரண்டாவது அலையைத் தவிர்ப்போம். ஆனால் ஒரு தடுப்பூசி ஒரு அவசரத் தேவை என்பதை அவர் உறுதிபடுத்தினார்.

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த செவ்வாய் கிழமை படி கடந்த 24 மணி நேரத்தில், 725 பேர் புதிததாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 இறந்திருப்பதாகவும், நாட்டில் மொத்தம் கொரோனாவால் 30,223-பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்