இனி இதை இவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..! பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவதை உள்ளூர் அதிகாரிகள் அமல்படுத்தலாம் என்று பிரான்சின் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் தொற்றுநோயின் நிலைமையைப் பொறுத்து உள்ளூர் அதிகாரிகள் முடிவெடுக்க முடியும் என்று அமைச்சர் ஆலிவர் வேரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கம் ஏற்கனவே பொது போக்குவரத்து மற்றும் கடைகள் உட்பட அனைத்து மூடப்பட்ட பொது இடங்களிலும் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜூன் மாதத்தில் வைரஸுக்கு எதிரான முதல் வெற்றியை அறிவித்தார் மற்றும் தேசிய அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தார், ஆனால் உள்ளூர் நோய்த்தொற்று பரவல் குறையாமல் அதே அளவிலே உள்ளன.

பிரான்ஸ் வியாழக்கிழமை 1,377 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளைப் பதிவு செய்தது.

ஐரோப்பாவின் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் 2,00,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுநோய் உறுதியானது, 30,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்