ஆப்பிரிக்க சுற்றுலாவின்போது பிரெஞ்சு தம்பதிக்கு சிங்கங்களால் நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானிய சுற்றுலா அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த ஆப்பிரிக்க சிங்க காட்சி சுற்றுலாவுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு தம்பதியர், தாங்கள் பாதுகாப்பாக தங்கள் முகாமில் இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தனர்.

தான்சானியா தேசிய பூங்காவிற்கு சென்றிருந்த Patrick மற்றும் அவரது மனைவி Brigitte Fourgeaud ஆகியோர் தங்கள் கூடாரத்திற்குள் தூங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு வந்த சிங்கம் ஒன்று Brigitteஐ முகர்ந்து பார்த்துள்ளது. என்ன நடக்கிறது என தம்பதியர் உணரும் முன் Patrick மீது பாய்ந்துள்ளது அந்த சிங்கம்.

தம்பதியர் எழுப்பிய சத்தத்தால் அங்கு கூடிய மற்றவர்கள் சிங்கத்தை துரத்த, அது Patrickஇன் கையின் ஒரு பகுதியை துண்டாக கவ்வி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டது.

மகிழ்ச்சியாக சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதத்தை எதிர்பாராத தம்பதியர், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்கள்.

மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு Patrickக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவரது கையில் ஒரு பாகம் போய்விட்டது.

இருவரும் சாகப்போகிறோம் என்று எண்ணியதாக தெரிவிக்கும் Brigitte, வாழ்க்கை முழுவதும் இந்த அதிர்ச்சியை மறக்கமுடியாது என்கிறார்.

பாதுகாப்பான சுற்றுலா என்று நம்பி தாங்கள் வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததையடுத்து, தங்களை சுற்றுலா அழைத்துவந்த அமைப்பின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர் தம்பதியர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்