ரஷ்யாவில் கோடிக்கணக்கில் சுருட்டிவிட்டு பிரான்சில் பதுங்கியிருக்கும் கோடீஸ்வரர்: நாடு கடத்துவதில் சிக்கல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ரஷ்யாவில் வங்கி ஒன்றிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிவிட்டு பிரான்சில் சுகபோகமாக வாழும் ஒருவரை நாடு கடத்துவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய கோடீஸ்வரரான Sergei Pugachev (57), ஒரு காலத்தில் அதிபர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர்.

அவர் ‘புடினின் வங்கியாளர்’ என்றே அழைக்கப்பட்ட நிலையில், புடினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், துரோகி என முத்திரை குத்தப்பட்டதால், ரஷ்யாவிலிருந்து வெளியேறி பிரித்தனியாவில் வாழ்ந்துவந்தார்.

ஆனால், பிரித்தானிய நீதிமன்றங்களில் Pugachev மீது வழக்குத் தொடர்ந்த மாஸ்கோ அதிகாரிகள், அவர் கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டதாக குற்றம் சாட்டினர்.

தனது பணத்தை அவர் மீட்க முயன்றதையடுத்து, அவரது பணத்தை முடக்குவதற்காக அவர் மீது விதிக்கப்பட்ட பிரித்தானிய நீதிமன்ற உத்தரவுகளை 12 முறை மீறியதாக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டது.

ஆனால், தீர்ப்பு வெளியாகும் முன்னரே பிரித்தானியாவிலிருந்து Pugachev, பிரான்சுக்கு தப்பி ஓடினார்.

தற்போது சொகுசாக பிரான்சிலுள்ள மாளிகை ஒன்றில் Pugachev வாழ்ந்துவரும் நிலையில், அவர் ஒரு பிரான்ஸ் குடிமகன் என்றும், அவர் பிரித்தானியாவில் சிவில் குற்றம் ஒன்றிற்காகத்தான் தண்டிக்கப்பட்டார் என்றும் கூறியுள்ள அவரது சட்டத்தரணி, சிவில் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டோரை நாடு கடத்தமுடியாது என்பதால் அவரை பிரித்தானியாவுக்கு நாடு கடத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இதை மறுத்துள்ள பிரித்தானிய உள்துறை அலுவலகம், பிரான்சிலிருந்து Pugachevவை பிரித்தானியாவுக்கு கொண்டுவருவதை சட்டப்படி எதுவும் தடுக்கமுடியாது என்று கூறியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்