பிரான்சிற்குள் நுழையும் அமெரிக்கா-பிரேசில் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு புதிய விதி அமல்!

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வரும் 16 நாடுகளில் இருந்து பிரான்சிற்குள் நுழையும் பயணிகள் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வந்தவுடன் வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பிரான்ஸ் பொதுவான பயணத்தை அனுமதிக்கவில்லை.

பிரான்சிக்குள் நுழைய அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலைச் சேர்ந்த பயணிகள் தங்கள் நாட்டிலிருந்து புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் கொரோனா இல்லை என சோதனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.

ஆதாரங்களை சமர்பிக்காவிட்டால் ஆகஸ்ட் 1 முதல் சோதனைகள் நடத்தப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கடந்த மாதம் அறிவித்தார்.

சனிக்கிழமை நிலவரப்படி பிரான்சில் கொரோனா உறுதியானவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

பிரான்சில் மொத்தம் 2,25,000 கொரோனா வழக்குகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன மற்றுமம் 30,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்