பிரான்ஸ் சுற்றுலாத் துறை கொரோனாவால் எவ்வளவு வருவாயை இழந்துள்ளது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் காரணமாக 40 பில்லியன் யூரோக்கள் வரையான வருவாயை பிரான்ஸ் சுற்றுலாத்துறை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் சுற்றுலாத்துறை மாநில செயலாளர் Jean-Baptiste Lemoyne, குறித்த தகவலை நேற்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், பல சுற்றுலா இயக்குனர்கள், ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது சராசரி வருவாய் 20-ல் இருந்து 25 சவீதமாக சரிவடைந்துள்ளது. சாதாரண நாட்களில் 180 பில்லியன் யூரோக்கள் வரை சுற்றுலாற்றுறை வருவாய் ஈட்டும்.

இதில் 60 பில்லியன் யூரோக்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் ஈட்டப்படுகின்றது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு பயணிகள் வரத்து முற்றாக வீழ்ச்சி கண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனால் பிரான்ஸ் சுற்றுலாத்துறை உடனடியான தாக்கத்தினை கண்டுள்ளது. இதனால் மொத்தமாக 30-ல் இருந்து 40 பில்லியன் யூரோக்கள் வரை வருவாய் இழப்பை கடந்த மாதங்களில் சந்தித்துள்ளதாக Jean-Baptiste Lemoyne தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்