பிரான்சில் கடலில் மெத்தை விரித்து தூங்கிய நபர்! கண்விழித்து பார்த்த போது அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in பிரான்ஸ்
3374Shares

பிரான்சில் கடலில் மெத்தை விரித்து தூங்கிக் கொண்டிருந்த நபர் கண் விழித்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

பிரான்சின் Dieppe (Seine-Maritime) நகரில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 4.45மணிக்கு, அங்கிருக்கும் கடற்பகுதியில், மிதக்கும் மெத்தை ஒன்றை போட்டு, சுமார் 31 வயது மதிக்கத்தக்க இளைஞர் தூங்கியுள்ளார்.

இதனால் மெத்தை மெல்ல, மெல்ல கடலின் நடுப்பகுதி நோக்கி சென்றபடி இருந்துள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நபர் இதை கண்டுகொள்ளவில்லை.

இப்படி சுமார் 2 கிலோ மீற்ற தூரத்திற்கு சென்ற பின், அவர் கண் விழித்து பார்த்த போது, நடுக்கடலில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து கடற பிராந்திய அதிகாரிகளின் பார்வைக்கு இத்தகவல் தெரியவர, உடனடியாக மீட்ப்புக்குழுவை அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஒருவழியாக அவர் காப்பாற்றப்பட்டு கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்